Romantic Couple

Romantic Couple
Tvayi snihyaami,Naanu ninnanu preethisuthene,Naan Unnai kadhalikindren,Nenu ninnu premistunnanu

Sunday, October 17, 2010

என்னவனே ...

என்னவனே ...

உன் மொழி நான் அறியேன்
என் மொழி நீ அறியாய்
நம் கண்கள் பேசும் மொழி யாவது
என்று யாரும் அறியார்

நான் தூரம் நின்ற போது
துரத்திய உன் நினைவுகள்
அருகில் வந்த போது அழகாய்
ரசிக்க செய்தது .........

பக்கம் வந்து நீ என்னை பார்த்திட
தொண்டை குழிக்குள் கலவரம்
கண்விழிகளால் என்னை  ஈர்த்திட
கற்பனையில் ஓர் ஊர்வலம்
புன்சிரிப்பால் நீ என்னிடம் பேசிட
உன்னுள் புதைந்து போன என் நிலவரம்

யாரிடம் சொல்ல யாருக்கு யார் என ?

உன் மனதில் என் ஞாபகங்கள் 
என் கனவில்  உன் நினைவுகள் 

மாய உணர்வுகளில் சிக்கிகொண்ட
நாம் இருவரும் என்றும் மறைய போவதில்லை

பிரிந்தாலும் நாம் சேர்ந்து கொள்வோம்
நம் கனவுகளிலே...

மறைந்தாலும் வாழ்ந்திடுவோம்
நம் உணர்வுகளிலே  ... I am Always dream about you da mama :)

No comments:

Post a Comment