Romantic Couple

Romantic Couple
Tvayi snihyaami,Naanu ninnanu preethisuthene,Naan Unnai kadhalikindren,Nenu ninnu premistunnanu

Saturday, July 23, 2011

முழுவதும் நினைந்தேன்
உன் நினைவுகளிலே
முற்றுப்புள்ளி இடுவாய்
முத்ததாலே
கதைகள்  பல சொல்கிறாய்
கண்களிலே 
மனம் காற்றாடி போல் அனது
உன்னாலே
புன்னகையில் பூக்க செய்தாய்
உன்  நினைவுகளில் மலர செய்தாய்
வானவில் போல் மனம் வலைந்து
நின்றது உன் வருகையை கண்டு
என் காதல் சூரியனே
என்று நீ  வருவாயோ
வெட்கத்தால்  நாம் மலர்ந்திட
என் அழகிய வனம்
                              ஒரு பிருந்தாவனம்
பூக்கள் நிறைந்த சோலைவனம்
வண்டுகள் தினம் அங்கே நாடி வரும்
வறட்சி இல்லா பாலைவனம்
குளிர் தென்றல் இங்கே  தேடிவரும்
என்ன்வனுடன் நான் இருக்கையில்
 

மழைத்துளிகள் என்னில் செய்த விளையாட்டு

மழைத்துளிகள் என்னில் செய்த விளையாட்டு

பூமியை முத்தமிட்ட மழைத்துளிகள்
என்னையும் முத்தமிட்டது
குடைகொண்டு நான் அணைத்தபோதும்
காதல் துளி துளியாய்
என்மேல் விழுந்தது
கற்பனைகள் பரவசமாய்
என்னில் விசியது

காதல்

மேதையையும் பித்தனாக்கும்
பித்தனையும் மேதையாக்கும்
வித்தை அறிந்தது காதல்

கற்பனையையும்  கவிதையாகும்
கவிதையும் கற்பனையாகும்
மாற்றம் அறிந்தது காதல்

வானிலை போல் மனநிலை மாறும்
மனநிலை போல் வானிலை மாறும்
தடுமாற்றம் தருவது காதல் ......

                           இந்த ஒரு காதலை என்னவென்று சொல்லுவேன்

Wednesday, July 20, 2011

Cutie cutie sweetie sweetie
Naughty Naughty sweetie sweetie
Chubby Chubby sweetie sweetie
Curly Curly sweetie sweetie
Rosy Rosy sweetie sweetie
Softy Softy sweetie sweetie
Ayu ayu you are MY SWEETIE :) I LOVE YOU MY DEAR SWEET SISTER
காற்றில்லா வனத்தில் சிறகடித்தேன்
நீர் இல்லா நதியில் நிந்தினேன்
காகித பூக்களின் மனம் அறிந்தேன்
பாலைவனத்தின் சோலைகள் கண்டேன்
குளிரும் நிலவின் தட்பம் உணர்தேன்
நடமாடும் உடலுக்குள் புகுந்து
காதல் என்ற உணர்ச்சி தந்ததால
மாயை உன்னில?
 உன் காதலிலா?
பிடித்த காதலை
மறைத்து கொள்வதா
மறைத்த காதல்
மடிந்து போவதா
வேண்டாமே
எங்கும் காதல் பூக்கட்டும்
உறவின் வாசனை என்றும் இருக்கட்டும்
என் அதிகாலை சூரியனே
உன்னை அன்றாடம் காண என்ன வழி
மின்னி செல்லும் உன் விழிகள் என்னை மீட்டு சென்றதே
மின்னல் போல் உன் பார்வை என்னை ஈர்த்து   சென்றதே
இரு வழியே கரு வழிக்கு உயிர் தந்தாய்
நாம் சுமப்பது உன்னை அல்ல
நம் காதலை
அந்த சுகமா சுமை
நீ நான் என்பதை நாம் என சொல்லும்

Tuesday, July 19, 2011

என்னவனே

காதலும் கசகின்றதே
பிரிவும் இனிகின்றதே
தனிமை வெறுகின்றதே
தடைகள் வருகின்றதே

For Vanitha :)


கண்கள் இரண்டு போதாது
என் கவிதையின் கலை நயம் காண
செவிகள் இரண்டு போதாது
உன் இனிமை ராகம் கேட்க
என் அழகிய தோழியே ..........!
நீ யார் செய்த சித்திரமோ
எவர் வரைந்த ஓவியமோ
நட்பிற்கு நீயே எடுத்துகாட்டு
உன்தன் இரக்க பண்பு அது தாரளம்
உன் உதவும் கைகள் ஒரு உதரணம்
பூவே உன் சேவை தொடரட்டும்
சோலை பூக்கும் சமுகமாய் மாறட்டும்
என்றும் மகிழ்ச்சியில் அரும்பிடு
மனித நேயத்தில் மலர்ந்திடு .........:)
நான் நடந்துச்செல்லும் பாதையெல்லாம்
உன் நினைவுகள்   துணை இருக்கும்
பேசாமல் போகதே
உன் பூன் முறுவலில் புண்ணான
என் நெஞ்சம்
உன் ஓர பார்வைக்கு ஏங்கி தவிக்கும்
சேரும் போது சுகம் தந்தாய்   
பிரியும் போது ரணம் தந்தாய்
சுகமும் ரணமும் பேதம் மில்லை
நான் என்னை மறந்து உன்னை
நினைக்கையில்
your dirty is beauty
naughty is beauty
chubby is beauty
lazy  is beauty
crazy is beauty
காதலிப்பேன் என்னவனின் கண்களை மட்டும்
நேசிப்பேன் என்னவனின் மனதினை மட்டும்
ரசிப்பேன் என்னவனின் புன்னகையை மட்டும்
வசிப்பேன் என்னவனின் நினைவினில்  மட்டும்
வர்ணிப்பேன் என்னவனின் குணத்தை  மட்டும்
என்றும்  யோசிப்பேன் என்னவனை மட்டும்
மாற்றம்  இல்லை மறுக்கவில்லை
மறந்திட வில்லை அழியா என் உயிர் ஓவியம் நீ
உன் வாசல் வந்தேன்  நீ என் வசம் வந்தாய்
மலர் இதழில் தேன் ருசிக்கும் போது
ஆசை கொண்ட அரும்பு மீசை
என்னை நாணம் கொள்ள செய்தது
அச்சம் கொண்டு கண்கள் மூடிய போது
மீச்சம் வைத்ததை எச்சில் வைத்தான்
உன் ஓசை என் இசை
உன் மொழி என் கவிதை
உன் சிரிப்பு என் தாய்மொழி
உன் முச்சு என் சுவாசம்
உன் இதையம் என் உறைவிடம்
உன் கண்கள் என் ஓவியம்
உன் நடை என் நாடித்துடிப்பு
அன்பே நீ  என் ஒற்றை தலையணை
உன்னை அணைத்த போது தான்
உன் சுகம் தெரிந்தது நீ என் சுமை
தாங்கி என்று
கண் மட்டும் சிமிட்டியது
உன் விழி தூண்டிலில் சிச்கியதால்