Romantic Couple

Romantic Couple
Tvayi snihyaami,Naanu ninnanu preethisuthene,Naan Unnai kadhalikindren,Nenu ninnu premistunnanu

Monday, August 30, 2010

To My Sweet Kutta (Chinnu)

கவிதைகள் பிறக்கின்றது உன்னை நினைக்கின்ற ஒவ்வொரு நிமிடமும்
மனதில் அழியாதது உன் முகம்
நினைவில் மறையாதது உன் புன்னகை
பிரிந்தே நீ போனாலும் பிரிவே இல்லை உன் நினைவுகளுக்கு

Sunday, August 15, 2010

Chinnu :)


ஒரு தலை வேட்கம் என் காதலை சொல்ல
தொண்டை குளிக்கு மேல் வார்த்தைகள் வரவில்லை
நாணம் கொண்டு உள்ளே சென்றது .
நானும் மறைந்து நின்றேன் என் அண்ணனின் பின்னால்...........


ஒரு கணம் உன்னை பார்க்க
மறு கணம் என்னில் தடுமாற
தவறி போனது என் இயல்புநிலை


பழைய பாடல்கள் கேட்டது இல்லை
கண்ணதாசன் கவிதைகள் படித்ததும் இல்லை
எட்டா துரத்தில் இருந்த என் தமிழ் பாடம் இன்று இனிக்கின்றதே .........உன்னால்


சுகந்திர வானில் சிறகடித்தவள்
சுகமாய் உன்னை நினைத்து கவிதைகள் எழுதுகின்றேன்

செல்லமாய் உன்னை கொஞ்ச நெஞ்சம் கெஞ்சிகின்றதே

என்ன செய்வது
என் தயக்க நிலையா இல்லை
என் மயக்க நிலையா


Chinnu :)


Thursday, August 12, 2010


துருவங்களின் காதல் உன்கண்களில் கண்டேன்

Hahu Thukka Masth Preeth Kartha - cómo decir ?


என்னில் வந்து மறைந்து கொண்டு
என் நினைவுகளில் ஒளிந்து கொண்டாய்

மின்னலாய் மின்னுகின்றாய்
தென்றலாய் தீண்டுகின்றாய்

மெல்ல நான் தொட்டதும் தீயாய் சுடுகின்றாயே

என்று மாறும் இந்த வானிலை......
உன்னால் வாடியது என் மனநிலை

எவ்விதம் சொல்ல என் காதலை
அர்த்தம் புரியாமல் தவிக்கிறேன்
தடைகளை மீறி சொல்லுவதால்
குறைகள் ஒன்றும் இல்லை எனில்
உடனே வந்து கூறிடுவேன்
உன்னவள் ஆக ஆவல் கொள்கிறேன் என்று...........:)

Tuesday, August 10, 2010


கொஞ்சி பேசிடும் உன் பார்வையில் புன்னகை பூக்குதே
கெஞ்சி நான் கேட்பதலோ

Monday, August 9, 2010


நீ கோபம் கொண்டாலும் உன்மேல் காதல் கொள்வேன்
நீ குறைகள் சொன்னாலும் நிறைகள் செய்வேன்
மௌனமாக ஒரு முறை சொல் நான் உன்னவள் என்று
மறுபடியும் வெட்கம் கொள்ள ...............

con él


இதலினும் மென்மையான காதல் கொண்டவள் நான்
முள்ளினும் கூர்மையான நேசம் கொண்டவன் நீ

ஒரு கரம் கொண்டு அரைந்தாலும்,
இரு கரம் கொண்டு அணைத்திடுவாய்
என்று தருவாய் அந்த சுகம் என்று எண்ணி நான் வாழ்கிறேன் :)


முன்னே கோபம் கொண்டு பின்னே குணம் கொண்டாய்
ரணம் தந்து வரம் தந்தாயோ
சுமையும் சுகம் தான் நாம் காதலில்
கண்ணீரும் தித்திக்கும்.................உன் நினைவில் வருவதாலே

Sunday, August 8, 2010

என்னவனை கொஞ்சும் போது


கொங்கு தமிழ் பேசும் என் சிங்க தமிழனே
உன் சிரிப்பு அழகுதான்
உன் கோபம் அழகு தான்
உன் கிறுக்கல்கள் அழகு தான்
என் காதலின் பித்தே நீ மட்டும் தான் என் எந்தனின் அழகு

உன்னை சந்தித்த அன் நிமிடம் ..........



காலங்களில் மாற்றமோ
நிமிடங்களில் தடுமாற்றமோ
நொடிகளின் கலக்கமோ
நான் என்னை துறந்து உன்னை ஏற்க
பயணிக்கின்ற ஒவ்வொரு நிமிடமும் கடினம் தான் நீ அருகில் இல்லாதால்
கண்ணோடு கண் சேரும் அன் நேரம் அப்படியே நின்று போனால் என்ன

என்னை என்ன செய்தாய் கள்வனே ........


தமிழின் சுவை அறியேன்
பொய்யின் மெய் அறியேன்
கவிதையின் பதம் அறியேன்
இசையின் சுரம் அறியேன்
காதலின் மொழி அறியேன்
என் குறும்பின் அழகே
உன்னை மட்டும்மே நான்அறிந்து கொல்ல நீ என்ன செய்தாய்...... உன் விழிகளில் ???:)

Viraaha - தனிமையில் அவன் நினைவுகள்


என்னவனின் கால் சட்டைக்குள் பயணித்த போது
கரைந்தே போனது மனம்
கவிதை எழுத சொல்லுதே தினம்
கண்ணும் இதயமும் மோதிக்கொண்டு காதல் பிறந்தது ஏனோ .........
உயிரும் மெய்யும் பேசிக்கொண்டு உணர்சிகள் வந்தது ஏனோ........
உன் நினைவுகள் என்னில் புரட்சிகள் செய்வதும் ஏனோ.........
உறைந்த உன் நாபகங்களில் உருகி போவதும் ஏனோ.........
துடிக்கிறதே மனம் நீ பிரிந்து இருக்கும் ஒவ்வொரு நிமிடமும்
ஏங்கி தவிக்கின்றதே தினம் எங்கோ நீ என
என்னுள் உதித்த உனக்கு என்றும் அழிவே இல்லை
நான் வரைந்த அழியாஓவியமே .........

Tuesday, August 3, 2010

Mathula :)



தோள்கொடுக்க தோழன் இருக்கையில் தோல்விகள்
இனி எனக்கு இல்லை

கைகொடுக்க என்னவன் இருக்கையில்
கவலைகள் இனி எனக்கு இல்லை

சோதனையின் கொம்பினை முறித்து
சாதனை செய்ய தூண்டியவன் .....

என் என்னும் முன்னமே எண்ணங்களை உணர்ந்தவன்
கற்பனையை களையறுத்து விற்பனை செய்தவன்

பூ போல் என்னை சுமக்க போர்க்களம் பல கண்டவன்

நான் காணமல் போனாலும் என் கண்முன்னே நின்றிடுவான்
கவிதையாய் பிறந்து கனவுகளில் வந்தவன்

இன்றோ இருகரம் பிடித்து என்னவன் என்கின்றான்
கற்பனையில் வடித்தவனை என் கணவனாக காணுகிறேன் ...........:)

Monday, August 2, 2010

Chinnu :)




அழகாய் இதல்களை முத்தமிட
செல்லமாய் குத்தியது அவனது மீசை :):):)