
என்னில் வந்து மறைந்து கொண்டு
என் நினைவுகளில் ஒளிந்து கொண்டாய்
மின்னலாய் மின்னுகின்றாய்
தென்றலாய் தீண்டுகின்றாய்
மெல்ல நான் தொட்டதும் தீயாய் சுடுகின்றாயே
என்று மாறும் இந்த வானிலை......
உன்னால் வாடியது என் மனநிலை
எவ்விதம் சொல்ல என் காதலை
அர்த்தம் புரியாமல் தவிக்கிறேன்
தடைகளை மீறி சொல்லுவதால்
குறைகள் ஒன்றும் இல்லை எனில்
உடனே வந்து கூறிடுவேன்
உன்னவள் ஆக ஆவல் கொள்கிறேன் என்று...........:)
No comments:
Post a Comment