

தோள்கொடுக்க தோழன் இருக்கையில் தோல்விகள்
இனி எனக்கு இல்லை
கைகொடுக்க என்னவன் இருக்கையில்
கவலைகள் இனி எனக்கு இல்லை
சோதனையின் கொம்பினை முறித்து
சாதனை செய்ய தூண்டியவன் .....
என் என்னும் முன்னமே எண்ணங்களை உணர்ந்தவன்
கற்பனையை களையறுத்து விற்பனை செய்தவன்
பூ போல் என்னை சுமக்க போர்க்களம் பல கண்டவன்
நான் காணமல் போனாலும் என் கண்முன்னே நின்றிடுவான்
கவிதையாய் பிறந்து கனவுகளில் வந்தவன்
இன்றோ இருகரம் பிடித்து என்னவன் என்கின்றான்
கற்பனையில் வடித்தவனை என் கணவனாக காணுகிறேன் ...........:)
No comments:
Post a Comment