Romantic Couple

Romantic Couple
Tvayi snihyaami,Naanu ninnanu preethisuthene,Naan Unnai kadhalikindren,Nenu ninnu premistunnanu

Saturday, April 23, 2011

உன் மேல் காதல்
                   என்றதும் கவிதை பிறக்கிறதே
உன் மேல் மோதல்   
                   என்றதும்  காமம் வருகின்றதே
கஞ்ச தனம் இல்லாமல்
            கொஞ்ச சொல்வேன் 
வஞ்ச தனம் இல்லாமல் மீஞ்ச சொல்வேன்
பிள்ளை மனம் கொண்டு ஏங்க சொல்வேன்
பால்மனம் மாற உன்னை மீண்டும்
தீண்ட  சொல்வேன்
தயங்கிய நிலையில் மயங்கும் போது
மோக வலையில் விழ செய்தாய்
என் முதல் காதலே
என் முதல் காமமே
மீண்டும் என்னை இவ்விதம் செய்வாயோ

ஈரூடல்   ஓர்  உயிர் ஆக
என் கண்களால் உன்னை ஈர்த்து
மனதில் சிறைவைத்தேன்
மறப்பதையே மறந்து விட்டேன்
                              - உன்னாலே
இந்த மாற்றம் தந்தது எதனலே 
அழகாய் நீ சிறிதாய்  அதிசயம் என்றேன்
சுகமாய் நீ பார்த்தாய் புதுமை என்றேன் 
மெதுவாய் நீ வந்தாய் கவிதை என்றேன்
என்ன செய்வது இனியவனே
காதல் என்னும் நினைவில் பறக்கின்றேன்
                                 பரவசமாய் உன்னாலே :)

என்னவனுக்கு ஆசையில் ஓர் கடிதம்,


உன்னை காணா  என் இதயம் துடிக்கவில்லை
                                                                   தவிக்கிறதே
துள்ளி திரிந்த என் கால்கள்  துலைந்த
என் இதயம் எங்கே என்று தேடுகின்றதே
கருவிழிக்கு காதல் வந்ததால்
கனவுகள் அதிகம் உன்னாலே
காற்றடைத்த என் நெச்சுகுள்  கற்பனைகள்
வருகிறது அதனாலே
அணைத்துகொள் என்னை உன்னுடன்
இணைந்திட சொல்
உறைந்திட சொல்  என்றும் உன்னுடனே
இருந்திட சொல் 

அழகு

நீயும் அழகு தான்
நானும் அழகு தான்
நம் காதல் அழகு என்பதால்
என்னவனே

காதலும் கசகின்றதே
பிரிவும் இனிகின்றதே 
தனிமை வெறுகின்றதே
தடைகள் எனோ வருகின்றதே
எங்கோ நீ சென்றதும் 

para ud

முழுவதும் நினைந்தேன்
உன் நினைவுகளிலே
முற்றுபுள்ளி ஈடுவாய்
முத்தத்தாலே
கதைகள் பல சொன்னாய்
கண்ணாலே
மனம் காற்றாடி போல் அனது உன்னாலே ................
கட்டி போட்டால் கடினம் என்றாய்
வெட்டி போட்டால் வேண்டாம் என்றாய்
தட்டி போட்டால் தாமதம் என்றாய்
முறையின்றி முழுவதும் எந்தன் முகவரி துலைந்தது உன்னிடமே.......:)

Esta noche

கண் மோதி உரசிய மோக தீ
கட்டுப்பாடு  இன்றி பரவியது  நம் தேகம்  எங்கும்  .....
அணையின்றி கட்டி அனைத்திட
வியர்வை மழையில் நினைகின்றோம்
அலையின்றி நம் சுவாச காற்றுகள்
அரவரமின்றி மோதி கொள்கிறதே
நிலைகுலைந்து நம் நிலத்தில் இருக்க
உயிரின் உணர்வுகளோ ஆகாயம் செல்கிறதே
பஞ்ச பூதங்களின் மாற்றம்
நம்மை கட்டி போட்டு விட்டதோ
சிலையாய் நம்மை சிறை எடுத்ததோ

Chinnu :)

நேசம் புதிது
உன்னை நேசித்த விதம் புதிது
காதல் புதிது
உன்னை கண்ட அந்த நிமிடம் புதிது
கவிதை புதிது
உன்னால் வந்த கற்பனைகள் புதிது
புரிய புதிரே என்னை நீ என்றுபுரிந்து கொள்வாய்
என்னவென்று புரியவில்லை எனக்கு
எனோ உன்மேல் மனதில் ஒரு கிருக்கு
கவிதை ரசம் அறியா உன்க்கு
காதலின் சுவை  புரியுமா 
கற்பனை நிறம் அறியா உனக்கு
கவிதையின் சுகம் அறியுமா
என்னவெல்லாம் செய்தாய் என்னவனே
பூன்னகையில் பூக்க செய்தாய்
உன் நினைவில் அரும்ப செய்தாய்
வானவில் போல் வளைந்து நின்றது
உன் வருகை கண்டு வெட்கத்தால் ....:)