Romantic Couple

Romantic Couple
Tvayi snihyaami,Naanu ninnanu preethisuthene,Naan Unnai kadhalikindren,Nenu ninnu premistunnanu

Saturday, July 31, 2010

To My Sweet Kutta







தொலைபேசி உரையாடலில்
தொலைந்த போது
முத்தமழை என் cell phoneக்கு
அவன் குரல் கேட்டதால் .........:)

இது வரமா ? சாபமா? - மாமா




இது வரமா ? சாபமா? - மாமா

நித்திரையிலும் உன் கனவு
யாத்திரையிலும் உன் நினைவு
யாசகம் கேட்டு இருகிறேன் என்றும் நான் உன்னவளாய் இருக்க ...........
உண்மை சொன்னால் நேசிபாயா உன் சுவாச காற்றாயாய் என்னை சுவாசிப்பாயா ?

Friday, July 30, 2010

தடுமாற்றம் ...........



என்னவன் நீ இல்லை என்றால்
உன்னை நினைப்பது ஏனோ.......
வார்த்தைகளில் சுழற்றியது ஏனோ.......
மனதினை கலைத்ததும் ஏனோ.......
பிரிவினை வந்ததும் ஏனோ......
கற்றது இனிமை
புரிந்தது உண்மை

அழகாய் வரைந்தது அவசரத்தில் கரைந்ததே
என் மனதில் இட்ட கோலம்

Esta noche...........para Ud...100% Dream..........:) ಅಟ್ ಫಸ್ಟ್ ನೈಟ್


தலையனையை கட்டி கொண்டால்
தலைவனின் கனவுகள்
தயக்கமின்றி கட்டிக்கொண்டேன்
அவனது நினைவுகளை..............
என் கூந்தலை மீட்டி
ஏன் மௌன ராகம் கேட்கின்றாய் .........
என் மலர் இதல்களை விரித்து
பெண்மையை எனோ உணர்கின்றாய் .........

என் கற்பனை குதிரையை கட்ட விழ்த்தி விட
கடிவாளம் இன்றி ஓடுகின்றதே ......

திண்ட திண்ட சுகம் தந்து
தேகம் எங்கும் மின்சாரம் ............

மீண்டும் மீண்டும் மனம் வந்து
வேண்டும் வேண்டும் என்கிறதே ..............

இரு விழி நடுவிலே ஒரு மோகம் வந்து
இமைகளை முடி கொள்கிறதே ..........

தடை களை மீறி கண்ணீர்த்துளிகள்
தலைவனைத் தீண்டி செல்கிறதே
சிற்பம் போல நீ செதுக்க
சிதைந்தே நானும் போகின்றேன்

மோகம் கொண்ட உன் சுவாசம்
மோசம் அடைய செய்கிறதே

இடையினை மெல்ல நீ வருட
மீண்டும் ஏங்கி போகின்றேன்

தொடங்கியே இடமே தெரியாமல்
தொலைத்து என்னை ரசிகின்றாய்..........

உரைவாழ கொண்டு நீ உரச
உரைந்து நானும் போகின்றேன்
வெப்பம் தப்பம் நீ கொடுத்து
என் தன் உயிரை ஏன் எடுகின்றாய்

வேட்கம் இன்றி நானும் கேட்டேன்
மீண்டும் இவ்விதம் செய்வாய்யோ

தனிமை இரவுகள் இனி வேண்டாமே
தலைவனே என் அருகில் நீ இருக்கையில்........................:)

அவனோடு உரையாடிய ஓர் நாள் இரவு ...............................


அவனோடு உரையாடிய ஓர் நாள் இரவு ...............................
உரக்கமே இல்லை
கண்ணாமூச்சி நாட்களில் பட்டாம்பூச்சியாய் பறந்த
அந்த நாட்களை பற்றி பேசினோம் ...........
விடலை பருவத்தில் விளையாடிய
கதைகளை சொல்லி ரசித்தோம் .............
சுட்டித்தனம் செய்த பிள்ளையாய் அவன் இருக்க
குட்டி குட்டி கதைகள் குறும்பாக இருந்தன ............
என் கோகுல கண்ணனுக்கு ஓர் ஆயிரம் கோபியராம்
அவன் செய்த லீலைகளை கேட்கையில்
குற்றமில்லா தூயஉள்ளம்
கள்ளமில்லா பிள்ளைமனம்
குறையில்ல தாயின் உள்ளம்
மாசில்லா வெள்ளை மனம்
விடியற்பொழுதில் அவன் உறங்க
மறுபடியும் விழித்துக்கொண்டடேன் - அவன் நினைவில்
அவன் கதைகளை சொல்லி என் கனவுகளை பறித்து கொண்டான்
தெளிவான என் மனநிலையில் சிறியதாய் ஒரு கல் விழ
கலங்கியது கண்ணாடி நீர் உருவானது கானல் நீர்
தடை செய்ய இயலா என் தடுமாற்றம்
விடை இல்லாமல் மயங்கி போனது ................

Thursday, July 29, 2010

For My Chinnu :)




மழையில் உடல் நினைந்து
அவன் நினைவில் மனம் நினைந்து..................

கற்பனயில் காதல் நிறைந்து
அவன் காதலில் கவிதை நிறைந்து...........

நிழலும் நிஜமாய் நீ இருக்க
என்றும் நீ என்னவன் ஆனாய்.................
நீ இன்றி என் வாழ்வில் நிறைவே இல்லை
உன் நினைவில் வரும் கவிதைக்கு குறைவே இல்லை...............:)

:)

காதல் இருமனம் சம்பந்தம் பட்டது
திருமணம் பலமனம் சம்பந்தம் பட்டது

Life :)

எதிர்புக்கள் வருவது இயற்கை.
எதிர்பாராமல் எதையு ம் எதிர் கொள்வதே வாழ்கை

To My Hero...........:)









மௌனமே கவிதை தான் உன் காதலின் முன்னே :)

Wednesday, July 28, 2010

என் உருவம் இல்ல உயிர்க்கு....:)

பனித்துளிகளை சேகரித்து அவன் உருவம் செய்தேன் .....
தேன்த்துளிகளை சேகரித்து அவன் உள்ளம் செய்தேன் .....
இருகரம் கொண்டு அவனை தீண்ட இமைகள் எனோ சிமிட்டவில்லை.........
தமிழ் மாத்திரை மறந்தேன் போலும் .................

Naa Bangaaru.............


புதியதோர் அனுபவம் புதுமையாய் இருகிறதே
சிரியதாய் உன் புன்னகை என்னை சிறகடித்து பறக்க செய்கிறதே
விடியலாய் உன் முகம் ஒளிர்கையில்
இருளினை எங்கும் காணவில்லை
காற்றாய் நீ என் அருகில் வருகையில்
கவிதைகள் என்னுள் பிறக்கிறதே
அழகாய் அரும்பிய உன் மீசை
அமைதியாய் என்னை கொள்கிறதே
குறிப்பாய் உன் குறும்பு பார்வை
என்னை உன்னுடன் கூ ட்டு சேர சொல்கிறதே...
சேர்வதில் தவறு இல்லை
பகுபதஉறுப்பு இலக்கணம் நமக்கு இல்லை........:)

How i Loss...........!!!


Search what You Loss
Search where where u Loss
Search will end ass your loss as gain ..........:) தொலைந்த இடமே தெரியாமல் தேடுகிறேன்

Tuesday, July 27, 2010

வாழ்கை

வீழ்வதற்கும், சாவதற்கும், அழுவதற்கும் அல்ல வாழ்கை வாழ்வதற்கே,
வாழ்ந்து காட்டுவோம்.
ஜெய்த்து காட்டுவோம். :) அனந்திகா :)

Hey Lovely :)


உன்னை என் காதல் என்பதா
இல்லை என் கவிதை என்பதா
என்ன மாயம் செய்தாய்
என்னை மறந்து நான் உன்னை நினைக்க
என் கண்ணின் கரு விழியில் உன்னை சுமக்க
என்னில் எனோ கலவரம் செய்தாய்
மெய் மொழியும் பொய் மொழியானது
பொய் மொழி என் தாய்மொழி ஆனாது
இன்று தாய் மொழியோ என் கவி மொழி ஆனாது

To My Sweet heart


என்னவென்று சொல்லுவேன் என்னவனை
தொலைதூரம் சென்றாலும் தொடர்ந்தே
என்னிடம் வருகின்றான்
தேய் பிறை வானில் தேன் நிலவாய்
என்னுள் மிளிர்கின்றான்
குளிர்கின்ற சூரியனை அவன் கண்களில் கண்டாலும் ..
சுடுகின்ற பனித்துளியை அவன் புன்னகையில் காணுகின்றேன்
கவிமழை என்பேன் அவன் நினைவுகள்
என்னுள் குடையாய் இருப்பதால்
பனி மழை
என்பேன் அவன் நினைவில்
நான் உரைவதல்
கனமழை என்பேன் அவன் நினைவுகளை
சுகமாய் சுமப்பதால்
அடைமழை என்பேன் என் கனவுகளில்
அவன் நினைவினை அடைவதால்
வேறு என்ன சொல்ல என் தாய் மொழியும்
நாணம் கொண்டு அவன் பின்னே நின்றது :)

To My Putta






நானும் கொண்டேன் நாணம் கொண்டேன் ..
உன்னை கண்ட முதல் நாள்... :)

At Last..................
களவும் கற்று மாற என்பது பழமொழி ...
காதலும் கற்று மறந்தேன் உன்னால் ... :)

To My kutta

அதிகாலை சூரியன் போல் அவன் முகம்
அன்றாடம் அவன் நினைவுகளே
விண்மின்களை தன் பக்கம் ஈர்க்கும் காந்த காண்கள்
எங்கெங்கும் அவன் உருவமே

To Chinnu

தலையனையை கட்டி கொண்டால்
தலைவனின் கனவுகள்
தயக்கமின்றி கட்டிக்கொண்டேன்
அவனது நினைவுகளை..............

என்னவனே...........

சுடரும் வரை சுகமாய் இருந்தது.
சுட்ட பின் ரணமாய் இருக்கிறதே.
தீ என்றால் திண்ட சுடுமோ.
வலியும் ஒரு வகை சுகம்தான்
வந்த பின் தெரிகிறது...அனந்திகா

Mi Romentica

Hey mi amor,No sé, dónde estás? ¿Quién es usted? ¿Qué u hacer? :)

My Gadi Putta....:)








காதல் என்னை உன் மடியில் குழந்தை ஆக்கியது
உன் கவி
தை என்னை பெண் ஆக்கியது....................

Monday, July 26, 2010

Hey Me Romántico


வார்த்தைகள் பேசவில்லை மௌனனங்கள் பேசியதே
கண்கள் காணவில்லை கனவுகள் காண்கிறதே
நாட்கள் நகரவில்லை உன் நினைவுகள் வருகின்றதே
உருவம் இல்லா எந்தன் உயிர் நீ
நேரில் நீ வருவாய் என்றால் கனவிலும் காத்திரூப்பேன்...என்றும் உன் நினைவுகளுடன் ... ...அனந்திகா:)

To My Chinnu :)


என் இனியவனுக்கு ,

செல்ல முத்தமிட நினைத்தேன்,
வெட்டி விட்டது நாணம்

கட்டிபிடிக்க நினைத்தேன்,
கட்டிபோட்டது மௌனம்

அடிமேல் அடி வைத்து நான் நடக்க
அடியே என்னும் குரலில் அரண்டு போனேன்
உன் குறும்பு ஆட்டத்தில்,

கரம் பிடித்து நீ நடக்க என் கவனம் சிதைந்து போனதேன் .....
தோல்மேல் நான் சாய்ந்திருக்க என்னில் தோல்வி கண்டு போனேன் ...

என் இந்த மாயம் ,
உன் அழகிய குறுகிய வட்டத்துக்குள் அடக்கி குற்றம் செய்த குற்றவாளி நீ .........

இனி என்

இனியவனே என் கண்களில் உன் தன் சிறைவாசம்
என்னவனே என்மனதில் உந்தன் வனவாசம்..........

என்ன பிழை செய்தாய் என்னிடம் நீ சிக்கி கொள்ள ............
.................................... என் பிரியா ஆயுள் கைதியே
எ ன்றும் உன் நினைவுகள் உடன் ........... அனந்திகா

To My God


ராதைக்கு சொந்தம் ஆனான்
சிதைக்கு சொந்தம் ஆனான்
கோதைக்கு சொந்தம் ஆனான்
பேதை எனக்கும் சொந்தம் ஆனவன்