
என் இனியவனுக்கு ,
செல்ல முத்தமிட நினைத்தேன்,
வெட்டி விட்டது நாணம்
கட்டிபிடிக்க நினைத்தேன்,
கட்டிபோட்டது மௌனம்
அடிமேல் அடி வைத்து நான் நடக்க
அடியே என்னும் குரலில் அரண்டு போனேன்
உன் குறும்பு ஆட்டத்தில்,
கரம் பிடித்து நீ நடக்க என் கவனம் சிதைந்து போனதேன் .....
தோல்மேல் நான் சாய்ந்திருக்க என்னில் தோல்வி கண்டு போனேன் ...
என் இந்த மாயம் ,
உன் அழகிய குறுகிய வட்டத்துக்குள் அடக்கி குற்றம் செய்த குற்றவாளி நீ .........
இனி என்
இனியவனே என் கண்களில் உன் தன் சிறைவாசம்
என்னவனே என்மனதில் உந்தன் வனவாசம்..........
என்ன பிழை செய்தாய் என்னிடம் நீ சிக்கி கொள்ள ............
.................................... என் பிரியா ஆயுள் கைதியே
எ ன்றும் உன் நினைவுகள் உடன் ........... அனந்திகா
No comments:
Post a Comment