
என்னவென்று சொல்லுவேன் என்னவனை
தொலைதூரம் சென்றாலும் தொடர்ந்தே
என்னிடம் வருகின்றான்
தேய் பிறை வானில் தேன் நிலவாய்
என்னுள் மிளிர்கின்றான்
குளிர்கின்ற சூரியனை அவன் கண்களில் கண்டாலும் ..
சுடுகின்ற பனித்துளியை அவன் புன்னகையில் காணுகின்றேன்
கவிமழை என்பேன் அவன் நினைவுகள்
என்னுள் குடையாய் இருப்பதால்
பனி மழை என்பேன் அவன் நினைவில்
நான் உரைவதல்
கனமழை என்பேன் அவன் நினைவுகளை
சுகமாய் சுமப்பதால்
அடைமழை என்பேன் என் கனவுகளில்
அவன் நினைவினை அடைவதால்
வேறு என்ன சொல்ல என் தாய் மொழியும்
நாணம் கொண்டு அவன் பின்னே நின்றது :)
No comments:
Post a Comment