
அவனோடு உரையாடிய ஓர் நாள் இரவு ...............................
உரக்கமே இல்லை
கண்ணாமூச்சி நாட்களில் பட்டாம்பூச்சியாய் பறந்த
அந்த நாட்களை பற்றி பேசினோம் ...........
விடலை பருவத்தில் விளையாடிய
கதைகளை சொல்லி ரசித்தோம் .............
சுட்டித்தனம் செய்த பிள்ளையாய் அவன் இருக்க
குட்டி குட்டி கதைகள் குறும்பாக இருந்தன ............
என் கோகுல கண்ணனுக்கு ஓர் ஆயிரம் கோபியராம்
அவன் செய்த லீலைகளை கேட்கையில்
குற்றமில்லா தூயஉள்ளம்
கள்ளமில்லா பிள்ளைமனம்
குறையில்ல தாயின் உள்ளம்
மாசில்லா வெள்ளை மனம்
விடியற்பொழுதில் அவன் உறங்க
மறுபடியும் விழித்துக்கொண்டடேன் - அவன் நினைவில்
அவன் கதைகளை சொல்லி என் கனவுகளை பறித்து கொண்டான்
தெளிவான என் மனநிலையில் சிறியதாய் ஒரு கல் விழ
கலங்கியது கண்ணாடி நீர் உருவானது கானல் நீர்
தடை செய்ய இயலா என் தடுமாற்றம்
விடை இல்லாமல் மயங்கி போனது ................
No comments:
Post a Comment